
சேலம் மாநகராட்சி பகுதிகளில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் தங்களுடைய குறைகளை மாநகராட்சி மைய அலுவலகத்தின் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு வரை எண் 0427-2777888 மூலமாகவோ அல்லது whatsapp எண் 83003 83003 மூலமாகவோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ தெரிவிக்கலாம் என்று சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் பல்வேறு இடங்களிலும் மக்கள் தொடர்ந்து தங்களுக்கான குறைகளை எவ்வாறு கூறுவது அதற்கு தீர்வு காண்பது எப்படி என தெரியாமல் இருந்த நிலையில் தற்போது மக்களுக்கு மாநகராட்சி ஆணையர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மக்கள் தங்கள் குறைகளுக்கு விரைவில் தீர்வு காண முடியும்.