தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில் போன்ற பொருட்கள்  மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் நியாயவிலை கடைகளில் பொருட்கள் எடை குறைவாக வழங்கப்படுகிறது என்ற குற்ற சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதனை சரி செய்வதற்கு தற்போது தமிழக அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது ரேஷன் கடைகளில் பொருட்களை பாக்கெட்டுகளில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது‌. அதன்படி முதல் கட்டமாக சேலம் மாவட்டத்தில் உள்ள நியாய விலை கடைகளில் ரேஷன் பொருட்கள் பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதைத்தொடர்ந்து தொகுதிக்கு ஒரு நியாய விலை கடையை தேர்வு செய்து பொருட்களை பாக்கெட்டுகளில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர். மேலும் இதற்கு பொதுமக்களிடம் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து  தமிழகம்  முழுவதும் இந்த திட்டம் நீடிக்கப்படும் என்று உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது.