இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டதால் பலரும் யுபிஐ பரிவர்த்தனைகளை பயன்படுத்துகிறார்கள். வங்கிகளுக்கு சென்று நீண்ட நேரம் காத்திருக்க வேண்டாம். ஏடிஎம் செல்ல வேண்டாம். கையில் போன் இருந்தாலே போதும். யுபிஐ மூலமாக பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். இந்த செயலியில் ரிசர்வ் வங்கி பல்வேறு விதிமுறைகளை வகுத்து வரும் நிலையில் பயனர்கள் வசதிக்காக அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளையும் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் சாதாரண செல்போன் பயன்படுத்துபவர்களுக்காக UPI 123 pay செயலி உருவாக்கப்பட்டது. இந்த செயலி மூலமாக யுபிஐ பண பரிவர்த்தனையில் இதுவரை அதிகபட்சமாக 5000 ரூபாய் வரைதான் அனுப்பும் வசதி இருந்தது. இதனை ரிசர்வ் வங்கி சமீபத்தில் 10,000 ரூபாயாக உயர்த்தியது. மேலும் இதனால் நாளை முதல் யுபிஐ மூலமாக ஒரு பயனாளருக்கு ரூ.10,000 வரையில் பணத்தை அனுப்ப முடியும்.