தற்போது மக்கள் மத்தியில் பாஸ்ட்புட் கலாச்சாரம் என்பது அதிகரித்து விட்டதால் ஸ்விக்கியின் பயன்பாடும் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் swiggy மூலமாக ரயிலில் பயணம் செய்யும் பயனாளர்கள் தங்களுக்கு பிடித்த உணவை தேர்வு செய்து வாங்கி உண்ண முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ ஆர் சி டி சி நிறுவனத்துடன் ரயிலில் உணவு வழங்க ஸ்விக்கி நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

தற்போது பெங்களூரு, புவனேஸ்வர், விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடாவில் இருந்து பயணிக்கும் ரயில் பயணிகளுக்கு இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் நாடு முழுவதும் 59 கூடுதல் நகர நிலையங்களில் இந்த சேவை விரிவுப்படுத்தப்படும். ஐ ஆர் சி டி சி யின் PNR எண்ணை பதிவு செய்து வழக்கம்போல பிடித்த உணவை ஆர்டர் செய்து கொள்ளலாம். உணவு செட்டாக வழங்குவதற்காக இன்சுலேட்டட் செய்யப்பட்ட ஸ்விக்கி பைகளில் வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.