தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பு ஏற்ற பிறகு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவ மாணவிகள் உயர்கல்வி தொடர ஏதுவாக மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் அரசு பள்ளியில் படித்து உயர் கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

மேலும் பொது தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 20000, பதினைந்தாயிரம் மற்றும் பத்தாயிரம் ரூபாய் என ஊக்கத்தொகை வழங்கப்படும். பாடங்கள் வாரியாக 100/100 மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.