
இந்தியாவில் போக்குவரத்தில் சாதாரண மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றதுதான் ரயில் போக்குவரத்து. நீண்ட தூரம் மற்றும் பாதுகாப்பான பயணத்தை கொடுக்கிறது. இதில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். ஒருசில நேரம் பயணிகள் சிலர் தவிர்க்க முடியாத காரணத்தால் பயணம் செய்ய தவறவிடுகிறார்கள். ஆனால் அதை வீணடிக்காமல் வேற்று பயணிக்கு மாற்றிவிடும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுடைய குடும்பத்தினருக்கு மட்டுமே மாற்றிவிட முடியும்.
இந்த சேவை பெறுவதற்கு ரயில் புறப்படும் நேரத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக இது குறித்த கோரிக்கை முன்வைக்க வேண்டும். அதாவது ஐஆர்சிடிசி போர்டலில் கோரிக்கை வைக்க வேண்டும். பிறகு டிக்கெட் புதிய பயணிக்கு மாற்றப்படும். டிக்கெட்டின் பிரிண்ட் அவுட் எடுத்து பக்கத்தில் உள்ள ரயில் நிலையத்திற்கு சென்று முன்பதிவு கவுண்டருக்கு சென்று டிக்கெட்டை மாற்ற விரும்பும் நபரின் ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற அடையாள சான்றுகளை காட்ட வேண்டும். அதன் பிறகு பயணச்சீட்டு உங்களுக்கு பதிலாக பயணிக்கும் அவருக்கு எளிதாக மாற்றப்படும்.