திருமணத்துக்குப் பிறகும் நிமிடங்களில் முடிவுக்கு வந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் சாகர் மாவட்டத்தில் நடந்துள்ளது. லலிதாபூரைச் சேர்ந்த இளம்பெண் மற்றும் சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் இருவருக்கும் போபால் சாலையில் உள்ள ஒரு ரிசார்ட்டில் பிரமாண்டமான திருமணம் நடைபெற்றது. வெகு விமரிசையாக நடந்த இந்த திருமணத்தில், இரு குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் மூழ்கினர். ஆனால், திருமணத்துக்குப் பிறகு மணமக்கள் காரில் சென்று கொண்டிருந்தபோது, மணமகள் சொன்ன வார்த்தைகள் திருமணத்தை முற்றிலுமாக மாற்றிவிட்டது.

“நான் இந்த கல்யாணம் செய்ததற்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது,” என்று கூறிய மணமகள், “நான் உன்னை காதலிக்கவில்லை, வேறொருவரை காதலிக்கிறேன். நாம் திருமணம் செய்தாலும், அண்ணன்-தங்கை மாதிரி இருக்கலாம்” என்று கூறியதும், மணமகன் அதிர்ச்சியடைந்தார். சில நிமிடங்கள் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்த அவர்  திருமண வாழக்கையில் நீடிக்க  விருப்பமில்லை என முடிவெடுத்து, திருமண மண்டபத்துக்குத் திரும்பிச் சென்றார். அங்கு, மணமகளின் குடும்பத்தினரிடம் உண்மையை கூறி, மணமகளை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டுவிட்டார்.

இந்த சம்பவம், மணமகனின் நம்பிக்கைகளை சிதைத்ததோடு, அவருடைய குடும்பத்தினரிடமும் பெரும் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் திருமணத்திற்கு முன்னதாகவே பெண் இந்த விஷயத்தை கூறியிருந்தால் இவ்வளவு தூரம் மணமகனுக்கு மன வேதனை நடந்திருக்காது என்பதால் பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.