
விஜய் டிவியில் மௌனராகம் இரண்டாம் பாகத்தில் ஹீரோயினாக நடித்தவர் ரவீனா தாஹா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதன் பிறகு விஜய் டிவியின் சிந்து பைரவி என்ற தொடரில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் அவர் அந்த சீரியலில் ஒரே ஒரு ஹீரோயின் என்று சொல்லி ஒப்பந்தம் செய்துவிட்டு அதன் பிறகு இரண்டு ஹீரோயின் கதை என்று சொன்னதால் தான் விலகிவிட்டார் என்று தகவல் பரவியது.
ஆனால் அது குறித்து அவர் விளக்கம் எதுவும் கொடுக்கவில்லை. இந்த நிலையில் ரவீனா தற்போது சீரியலிலிருந்து திடீர் என விலகியதால் தயாரிப்பு நிறுவனம் சங்கத்தில் புகார் கொடுத்ததாம். இதனால் ரவீனா இனி சீரியல்களில் நடிக்க கூடாது என்று ரெட் கார்ட் போடப்பட்டதாகவும் தகவல் பரவியது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ள ரவீனா, என் மீது புகார் கொடுக்கப்பட்டது உண்மைதான். ஆனால் பேசிப் பிரச்சனை தீர்க்கப்பட்டு விட்டது. சீரியல்களில் நான் நடிக்க தடை எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.