இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக ஊடகங்களை பயன்படுத்துகிறார்கள். இதை பயன்படுத்துவதன் மூலம் குழந்தைகளின் உடல் வளர்ச்சி மற்றும் மன வளர்ச்சியை பாதிக்கிறது. இதன் காரணமாக தெற்கு ஆஸ்திரேலியா மாகாணத்தில் முதல் மந்திரி பீட்டர் மலினஸ்காஸ் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதன்படி 14 வயதுகுட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தக்கூடாது. ஒருவேளை பயன்படுத்த வேண்டும் என்றால் அதற்கு பெற்றோரின் ஒப்புதல் மிகவும் அவசியம். இது தொடர்பான நடைமுறையை ஆராய ஹை கோர்ட் நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய உத்தரவுக்கு பலரும் வரவேற்பு கொடுத்துள்ளனர்.