
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றது போல அனைத்துமே நவீனமயமாகிவிட்டது. எந்த வேலையுமே ஆன்லைன் மூலம் எளிதாகிவிட்டது. அதன்படி தற்போது சிங்கிளாக இருக்கும் இளைஞர்களுக்கு புது அப்டேட் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் பல இளைஞர்கள் சிங்கிளாக இருந்து வருகின்றனர்.
அவர்களுக்காக ‘AI dating, AI girlfriends’ போன்ற செயற்கை நுண்ணறிவுகளை பல ஸ்டார்ட் அப்கள் உருவாக்கியுள்ளன. AI Girlfriends சாட் பாட் மூலமாக இன்னொரு மனிதரிடம் பேசுவது போல செயற்கையான காதலிகளுடன் இயற்கையான மொழியில் பேசலாம். மேலும் ‘AI Girlfriend Simulator’ என்பது AI இன் மேம்பட்ட மாடல்களில் ஒன்றாகும். இதில் 3டி தொழில்நுட்பம், ஏஆர், விர்ச்சுவல் ரியாலிட்டி போன்ற வசதிகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.