
உத்திரபிரதேசம் மாநிலத்தில் முசாபர் நகரில் உள்ள பாலாஜி தாம் கோவிலில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கடுமையான ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்து வந்தாலும் கலாச்சாரம் என்பது முக்கியமான ஒன்றாக இருப்பதால் பல மாநிலங்களிலும் பெரிய கோவில்களில் ஆடை கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி தற்போது உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள இந்த கோவிலில் அரை பேண்ட் மற்றும் மினி ஸ்கர்ட் போன்ற குட்டையான ஆடைகளை அணிந்த பெண்கள் குலதெய்வ தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் அதுபோல ஆடை அணிவதால் மற்றவர்களின் கவனத்தை சிதறடிக்கின்றனர். இதை நாங்கள் கவனித்து இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த கோவில் தலைமை பூசாரி தெரிவித்துள்ளார்.