இன்றைய காலகட்டத்தில் ஏஐ தொழில்நுட்பம் என்பது வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. மனிதர்களைப் போலவே இருக்கும் ரோபோக்களை உலகெங்கும் உருவாக்கி வருகின்றனர். இந்த ரோபோக்கள் மனிதர்கள் போலவே வேலை செய்யக்கூடியது.

இன்றைய காலகட்டத்தில் பல இடங்களிலும் ரோபோக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. குறிப்பாக சீனாவில் சமீபத்தில் ரோபோக்களை மாரத்தான் போட்டியில் மனிதர்களுடன் சேர்ந்து ஓட வைத்திருந்தனர். அதேபோன்று தற்போது ரோபோக்களை குத்துச்சண்டை போட்டியில் ஈடுபடுத்திய வீடியோ வைரலாகி வருகிறது.

அதாவது சீனாவில் உள்ள ஹாங்கு பகுதியில் வருகிற 25-ம் தேதி ரோபோக்கள் குத்துசண்டை போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்காக மனிதனைப் போல் இருக்கும் ரோபோக்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. மேலும் ரோபோக்கள் பயிற்சி செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.