
பொதுவாக கணவனுக்கு தெரியாமல் மனைவியோ அல்லது மனைவிக்கு தெரியாமல் கணவனோ திருமணத்தை மீறிய உறவில் இருப்பது குற்றம். கள்ளத்தொடர்பு என்பது குற்றமாக கருதப்படும் இடையே இதற்கு தண்டனைகள் கூட கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது நியூயார்க்கில் ஒரு புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது கணவன் மற்றும் மனைவிக்கு தெரியாமல் வேறொரு நபருடன் உடலுறவு கொள்வது குற்றமாகாது என்ற புதிய மசோதாவில் கவர்னர் கையெழுத்திட்டுள்ளார்.
அந்த நாட்டில் கணவன் மற்றும் மனைவிக்கு தெரியாமல் வேறொரு நபருடன் உடலுறவில் இருந்தால் அவர்களுக்கு 3 மாதங்கள் வரை சிறை தண்டனை வழங்கப்படும். இந்த 117 ஆண்டு பழமையான சட்டத்தை ரத்து செய்யும் மசோதாவில் தற்போது நியூயார்க் கவர்னர் கையெழுத்திட்டுள்ளார். கடந்த 1907 ஆம் ஆண்டிலிருந்து திருமணம் ஆன கணவன் அல்லது மனைவி வேறொரு நபருடன் உடலுறவு வைப்பது சட்டப்படி குற்றம் என்பது அமலில் இருந்த நிலையில் தற்போது அதனை ரத்து செய்து. மேலும் கடந்த 1972 முதல் இந்த சட்டத்தின் கீழ் 5 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.