
அமெரிக்காவில் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது ஹெராயின், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் அதிக ஆபத்து கொண்டவைகளாக அங்கு வகைப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஹெராயின் பயன்படுத்துபவர்கள் மற்றும் கடத்துபவர்களுக்கு அதிகபட்ச தண்டனைகள் வழங்கப்படுகிறது. இருப்பினும் கஞ்சா பயன்படுத்துபவர்கள் மீது பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கப்படுவது கிடையாது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு கஞ்சாவை குறைந்த ஆபத்து கொண்ட போதைப்பொருள் என மறுவகைப்படுத்த முடிவு செய்துள்ளது. இதனால் இனி கஞ்சாவை பயன்படுத்துவது அதிகாரப்பூர்வமாக படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக அதிபர் ஜோப் பைடன் கூறுகையில், இனி கஞ்சா பயன்படுத்திய குற்றத்திற்காக யாரும் சிறையில் இருக்கக்கூடாது. இருப்பினும் கஞ்சாவை அணுகுவதில் சிலர் தோல்வியுற்றதால் பல உயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த தவறுகளை சரி செய்ய வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.