
சென்னையில் உள்ள அனைத்து மண்டல போக்குவரத்து அலுவலகங்களுக்கும் வாரம் தோறும் சுமார் 40,000 ஓட்டுனர் உரிமம் கோரி விண்ணப்பங்கள் வருகிறது. இவை அனைத்தையும் முடிக்க போக்குவரத்து அலுவலகங்களால் முடியவில்லை. இதனால் போக்குவரத்து அலுவலகங்களில் ஏராளமான விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து போக்குவரத்து அலுவலகங்களும் சனிக்கிழமை செயல்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை முடிக்கவும் அலுவலகம் செல்லும் விண்ணப்பத்தாளர்கள் பயன் பெரும் விதமாகவும் போக்குவரத்து அலுவலகங்கள் சனிக்கிழமையும் செயல்படும். அதேசமயம் இ சேவைகள் சனிக்கிழமைகளிலும் முழுமையாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பித்து காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்க திட்டமிட்டு இருப்பவர்களும் விரைவாக ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.