இனி பணத்தை எடுக்க வங்கி மற்றும் ஏடிஎம் மையத்திற்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த புதிய வசதி குறித்து தற்போது பார்ப்போம். அதாவது ஆதார் இயக்கப்பட்ட கட்டண முறை மற்றும் ஏஇபிஎஸ் முறை மூலமாக வீட்டில் இருந்தபடி பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு முதலில் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்திருப்பது மிகவும் அவசியம். இந்த வசதியை பயன்படுத்தி வங்கிக் கணக்கில் பேலன்ஸ் பார்ப்பது, பணம் எடுப்பது, பணம் போடுவது, நிதி பரிமாற்றம் போன்ற சேவைகளையும் பெறலாம்.

இந்த புதிய வசதியை நேஷனல் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. உங்களுடைய ஆதார் எண்ணை உள்ளிட்டு கைரேகையை பதிவு செய்வதன் மூலம் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு நீங்கள் வங்கி நிருபரிடம் செல்ல வேண்டும் அல்லது அவரை வீட்டிற்கு வருமாறு அழைக்க வேண்டும். இந்த சேவையை பொது சேவை மையத்திலுள்ள ஆப்ரேட்டர்களும் வழங்குவார்கள். இந்நிலையில் வீட்டிற்கு வரும் வங்கி நிருபர் மினி  ஏடிஎம் இயந்திரம் மூலம் ஆதார் எண்ணை உள்ளிட்டு பயோமெட்ரிக் விவரங்களை ஸ்கேன் செய்வார்‌. இதைத்தொடர்ந்து பணம் கிடைக்கும். மேலும் இதன் மூலம் அதிகபட்சம் ரூ‌‌.10,000 வரை பெற்றுக் கொள்ளலாம்.