ஆதார் அட்டை என்பது ஒரு மிக முக்கிய ஆவணமாகவே உள்ளது. எங்கு சென்றாலும் என்ன புது ஆவணங்கள் நம் வாங்க வேண்டும் என்றாலும் அதற்கு ஆதார் அட்டை ஆவணமாக கேட்கப்படுகிறது. அதோடு அந்த சமயத்தில் ஆதார் சரிபார்ப்பு செய்வதற்கு வெகுநேரமும் எடுக்கிறது. இந்த சிக்கலை தீர்ப்பதற்காகவே மத்திய அரசு புதிய தளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால்  “Adhaar Good Governance”  என்ற புதிய டிஜிட்டல் தளமானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து வரும் ஆதார் சரிபார்ப்பு கோரிக்கைகளை. எளிமையாக்கும் செயலை துரிதப்படுத்தவும் திருத்தப்பட்ட ஆதார் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது தகுதியுள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் https://www.meity.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து ஆதார் சரிபார்ப்பு சேவையை பெற்றுக் கொள்ளலாம். இந்த சேவையை அரசு மற்றும் தனியார் விருந்தோம்பல், சுகாதார மதிப்பீட்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். அதோடு இது பொதுமக்களுடைய வசதிக்காக உருவாக்கப்பட்டது என்றாலும் அதை பயன்படுத்தும் போது ஆதார் சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும்.