பொதுவாகவே வீடுகளில் சமையலுக்காக எரிவாயு சிலிண்டர்கள் தற்போது அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த சீடர்களை எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் வாங்கும் போது அதிகமான பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனை தடுப்பதற்காக தீயணைப்பு பிரிவினர் சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். அதன்படி சிலிண்டர்களை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை என்ன என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

முதலில் எரிவாயு சிலிண்டர்களில் தீ பற்றினால் தண்ணீர் சனல் கோணிப்பை அல்லது வாளியால் முடி தீயை அணைக்க வேண்டும்.

தீக்காயங்கள் ஏற்பட்டால் எண்ணெய் கொண்டு அதனை ஆற்ற முயற்சிக்கக் கூடாது. தண்ணீரில் நனைத்து விட்டு உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

எரிவாயு சிலிண்டர்களை வாங்கும் போது எந்த சிலிண்டர் எந்த வருடத்தில் தயாரித்தது அது காலாவதி ஆகிவிட்டதா என்பதை உறுதி செய்த பிறகு தான் வீட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.