பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் ஒருவர் தனது 7 வயது மகனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுவன் தனது தந்தையிடம் ஸ்கூல் பீஸ் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனால் கோபமடைந்த சிறுவனின் தந்தை தனது மகனின் தலையைத் துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். அதன் பிறகு பள்ளி கட்டணம் கேட்டு தொந்தரவு செய்ததால் இப்படி கொலை செய்தேன்.

இனி அவனுக்காக படிப்பு செலவு செய்ய தேவையில்லை. வீடு வாங்க வேண்டியதில்லை. மொத்தத்தில் செலவே இல்லை எனக் கூறி அந்த கொடூரன் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. இதுகுறித்து அறிந்த போலீசார் சிறுவனின் தந்தையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.