
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பஸ் பாஸ் எடுப்பவர்களுக்கு சூப்பரான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது . அதாவது தமிழக அரசானது பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளையும், திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு இலவச பஸ்பாஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் மற்றும் அலுவலகம் செல்வோருக்கு தள்ளுபடி விலையில் மாதாந்திர பாஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இதனை பெறுவதற்காக இனி பேருந்து நிலையங்களுக்கோ, டிப்போக்களுக்கோ செல்லத் தேவையில்லை. தமிழக இ-சேவை மையங்களிலேயே பஸ்-பாஸ் எடுக்கும் வசதியினை அமைச்சர் சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார்.