இனி இலங்கை சுற்றி பார்க்க செல்வதற்கு விசா தேவை இல்லை என இலங்கை அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி  அக்டோபர் 1 முதல் இந்தியாவில் இருந்து இலங்கையை சுற்றி பார்க்க செல்லும் இந்தியர்களுக்கு விசா தேவை இல்லை என அறிவித்துள்ளது. இலங்கை அரசு இதில் விசா இல்லாமல் ஆறு மாதங்கள் வரை இலங்கையில் தங்கலாம் என அறிவித்துள்ளது.

இதனால் இலங்கைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும், மேலும் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியா மற்றும் அண்டை நாடுகளின் நட்பை வளர்ப்பதற்காக இம்முடிவை எடுத்ததாகவும் கூறுகிறார்.

இதில் இந்தியா மட்டுமல்லாமல் சீனா, ஜெர்மனி ,சவுதி அரேபியா என 35 நாடுகளுக்கு இவ்விதிமுறை பொருந்தும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது