
தமிழகத்தில் மதுபான கடைகளில் பல்வேறு ரகங்களில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பிராண்டுகள் அனைத்தும் விற்பனைக்கு வருவதற்கு முன்பாக சோதனை செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு கோல்டன் வாட்ஸ் நம்பர் ஒன் பிராந்தி விற்பனைக்கு வந்தது. இது தற்போது குடிப்பதற்கு உகந்ததல்ல என்பது தெரியவந்துள்ளது. இதனால் தமிழக முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு முக்கிய அறிவிப்பு பறந்துள்ளது.
அதாவது அந்த வகை பிராண்டியை விற்பனைக்கு வைத்திருந்தால் உடனடியாக அதனை சம்பந்தப்பட்ட மதுபானக் கிடங்குகளுக்கு திருப்பி அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அந்தந்த மதுபான கடை ஊழியர்களுக்கு மாவட்ட மேலாளர்கள் பிறப்பித்துள்ளனர். இந்த வகை மதுவை தயாரிக்கும் நிறுவனம் மன்னார்குடியில் அமைந்துள்ளது. மேலும் இந்த உத்தரவு அந்த பிராண்ட் சரக்கை குடிக்கும் மது பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.