
பெரும்பாலும் நாம் ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டுவிட்டு அதனுடைய தோலை தூக்கி எரிந்து விடுகிறோம். இனி அப்படி செய்யாதீர்கள். ஏனெனில் அதில் ஏராளமான நன்மைகள் இருக்கிறது. ஆரஞ்சு தோல்களில் இருக்கும் எண்ணெய் போன்ற பொருளானது புற்றுநோயை எதிர்த்து போராட உதவுகிறது என்று கூறப்படுகிறது.
ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்திற்கு ஆரஞ்சு பழத்தின் தோல் உதவுகிறது. இதில் அதிக அளவு சிட்ரிக் அமிலம் இருப்பதால் சருமத்தை மிளிர செய்யறது. ஆரஞ்சு தோல்கள் சிலவற்றை வெயிலில் காயவைத்து அதன் தோலை நன்றாக தூளாக மிக்சியில் அரைக்கவும். இதனுடன் தயிர் சேர்த்து பேஸ் பேக்காக பயன்படுத்தி வந்தால் முகம் பொலிவு பெறும்.