இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் சமீபத்தில் ரீசார்ஜ் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தி அறிவித்தனர். அதனை தொடர்ந்து வோடாபோன் ஐடியா நிறுவனமும் ரீசார்ஜ் கட்டடத்தை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் அரசு நிறுவனமான bsnl தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி தன் பக்கம் ஈர்த்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் vodafone ஐடியா நிறுவனம் 701 ரூபாய் போஸ்ட் பெய்டு திட்டத்தில் அண்மையில் 50 ரூபாய் உயர்த்தியது. அத்துடன் அந்தத் திட்டத்தில் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை அளித்த வரம்பற்ற டேட்டாவை தற்போது நீக்கியுள்ளது. தற்போது வரம்பற்ற அழைப்பு, மாதத்திற்கு 3000 எஸ்எம்எஸ் மற்றும் 150 gb டேட்டா ஆகியவற்றை வழங்குகிறது. அமேசான், ஹாட் ஸ்டார், சோனி லைவ், சன் நெக்ஸ்ட், ஓடிடிகளில் ஏதேனும் ஒன்று மட்டுமே தேர்வு செய்யலாம் எனவும் வோடாபோன் அறிவித்துள்ள நிலையில் இந்த செய்தி வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.