அபாயகரமான முறையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய மனிதர்களை இறக்கினால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தேசிய தூய்மை பணியாளர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விண்வெளியை ஆராயும் இந்த தொழில்நுட்ப முன்னேற்ற காலத்திலும் மலக்குழி மரணங்கள் நிகழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்ய மனிதர்கள் இறங்குவதை கண்டால் 14420 என்ற தேசிய உதவி எண்ணை தொடர்பு கொள்ளும்படி. அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் விஷவாயு தாக்கி உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசு இவ்விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயிரிழப்புகளை தடுக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை விடுத்தது வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது.