
2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இதில் அனைத்து துறைகளுக்கும் தனித்தனியாக நிதி ஒதுக்கப்பட்டது. அதேசமயம் சாமானிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் பயன் பெறும் வகையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்த நிலையில் வீட்டு வாடகை மூலம் வரும் வருமானத்தை இனி வீட்டு சொத்துக்களில் இருந்து வருமானம் என்ற தலைப்பின் கீழ் வரி செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய பட்ஜெட்டில், வரி செலுத்தும் தனி நபர்கள் ஒரு வீட்டை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ வாடகைக்கு விட்டு வரும் வருமானத்தை இனி தொழில் அல்லது வியாபாரம் மூலம் கிடைத்த வருமானம் என்ற தலைப்பில் பதிவு செய்ய தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.