அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் உள்ளடங்கிய ஒரு நாள் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது.

இன்று மூன்றாவது போட்டி நடைபெற்று இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து 435 ரன்கள் எடுத்தது. ஆனால் அயர்லாந்தாணி 131 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.

இந்நிலையில் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய ஆடவர் அணி எடுத்த 418 ரன்கள் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோராக இருந்த சாதனையை மகளிர் அணி முறியடித்து 435 ரன்களை அதிகபட்ச ஸ்கோராக பதிவு செய்துள்ளது.