
பாகிஸ்தான் மற்றும் துபாயில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இருந்து வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் வெளியேறியது. இதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அகிய அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இப்ராஹிம் ஜட்ரான் 177 ரன்கள் எடுத்தார். இதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 317 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இதனால் ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தற்போது வாழ்த்து தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், சர்வதேச கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணி தொடர்ந்து எழுச்சியை கண்டு வருகிறது. இனிமேலும் அவர்கள் பெறக்கூடிய வெற்றிகளை உங்களால் ஆச்சரியம் என்று வர்ணிக்க முடியாது. அவர்கள் தற்போது வெற்றியை பொழுது போக்காக உருவாக்கியுள்ளனர். இப்ராஹிம் சூப்பராக சதம் அடித்தார். ஓமர்சாய் அற்புதமாக 5 விக்கெட்டுகள் எடுத்தார். நன்றாக விளையாடினார்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இதற்கு இப்ராஹிம் சச்சினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.