
2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து வகையான சேவைகளுக்கும் டிஜிட்டல் முறையில் செல்லுபடியாகும் சான்றிதழ்களை வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பிறப்பு, இறப்பு, சுகாதார சான்றிதழ் மற்றும் திட்ட அனுமதி ஆகியவை டிஜிட்டல் முறையில் செல்லுபடியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வர்த்தக வரி, சொத்துவரி மதிப்பீடு, தொழில் முறை வரி மதிப்பீடு போன்ற சேவைகளுக்கான டிஜிட்டல் சான்றிதழ்கள் விரைவில் வழங்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.