ஜாமினில் விடுதலையான கெஜ்ரிவால் டெல்லியில் இன்று கட்சி நிகழ்வில் பங்கேற்றார். அப்போது தொண்டர்களை சந்தித்த அவர் உற்சாக மிகுதியில் பறக்கும் முத்தங்களை வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர், சிறையில் இருந்து நேராக அவர்களை சந்திக்க வந்துள்ளதாகவும், 50 நாள்களுக்கு பின்பு தொண்டர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி என்றும் அவர் கூறினார். மேலும், ஹனுமனின் அருளால்தான் இன்று அவர்கள் முன்பு நிற்பதாகவும் தெரிவித்தார்.