இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமே செல்போன் இருக்கிறது. செல்போன் மூலமாக மற்றவர்களிடம் பேசுவதோடு மட்டுமல்லாமல் பல வேலைகளையும் எளிதில் முடிக்க முடிகிறது . இதில் பயன்கள் அதிகமாக இருந்தாலும் அதன் மூலம் மோசடிகளும் அரங்கேறி வருகிறது. குறிப்பாக செல்போன் அழைப்புகள் மூலம் தொடர்பு கொண்டு மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

மோசடிகள் குறித்து அவ்வப்போது வங்கிகள் எச்சரிக்கை விடுத்தது வரும் நிலையில் மோசடி நபர்களிடம் இருந்து கவனமாக இருக்குமாறு, வாடிக்கையாளர்களுக்கு RBI எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக RBI சார்பில் அனுப்பியுள்ள  குறுஞ்செய்தியில், நீங்கள் மேற்கொள்ளாத டெபிட் பரிவர்த்தனைக்கு எஸ்எம்எஸ் வந்தால், UPI உட்பட அனைத்து டெபிட் முறைகளையும் உடனடியாக ப்ளாக் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வங்கி கிளைக்கும் தகவல் தெரிவிக்குமாறு ரிசர்வ் வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது.