
கோவை, பொள்ளாச்சி மற்றும் நீலகிரியில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், இந்த மூன்று தொகுதிகளில் பாஜகவின் வெற்றி எழுதி வைக்கப்பட்ட ஒன்று. தேர்வு முடிவு வெளியாகும் நாளில் இது அனைவருக்கும் புரியும். தமிழகத்தில் பாஜக யாரும் எதிர்பார்க்காத வகையில் வளர்ந்துள்ளது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் போதை பொருள் விவகாரத்தில் திமுக டிஜிபியை பலிகடாவாக்க முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.