முன்னதாக நேர்ந்த பல ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர்கள் ராஜினாமா செய்த வரலாறுகள் உண்டு. இந்த பட்டியில் சுரேஷ் பாபு, மம்தா பானர்ஜி, நிதிஷ் குமார் என பலர் உள்ளனர். இந்நிலையில், இதுவரை இல்லாத அளவிலான கோர விபத்தாக தற்போதைய ஒடிசா ரயில் விபத்து இருக்கிறது. இதற்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

இந்நிலையில் தகுதியற்ற நபர்களை அமைச்சராக்குவதில் பிரதமர் மோடி உலக பிரபலம் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி சாடியுள்ளார். ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று உடனடியாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் அவர், பிரதமர் தலையை ஆட்டும் வரை காத்திருக்கக் கூடாது என்று ட்வீட் செய்துள்ளார். தகுதியற்ற தலைமைக்கு மணிப்பூர் மற்றொரு உதாரணம் என்றும் சுப்ரமணியசாமி சாடியுள்ளார்.