தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விஜய்.இவர் கடந்த வருடம் தமிழக வெற்றி கழகம் என்று அரசியல் கட்சியினை தொடங்கிய நிலையில் அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். நடிகர் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள்இருப்பதால் அவருடைய அரசியல் வருகை தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் விஜய்க்காக அவருடைய ரசிகர்கள் அடிக்கடி சமூக வலைதளத்தில் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பல்வேறு விதமான வீடியோக்களை வெளியிடுவார்கள்.அந்த வகையில் நடிகர் விஜய்க்காக தற்போது தனுஷ் ஓட்டு கேட்பது போன்ற ஒரு வீடியோவை எடிட் செய்து வெளியிட்டுள்ளனர்.அதாவது நடிகர் தனுஷ் ஒரு படத்தில் பேசும் டயலாக்கை இணைத்து விஜய்க்காக ஓட்டு கேட்பது போன்ற அதனை எடிட் செய்து உருவாக்கியுள்ளனர். மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by 𝐆𝐎𝐖𝐓𝐇𝐀𝐌 💓✨ (@gowtham_vijay_editz)