
கால்நடை பண்ணைகளில் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட மருந்துகளை வழங்கக்கூடாது என எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. அதாவது கால்நடை பண்ணைகளில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகள், கால்நடைகள் போன்றவற்றிற்கு நைட்ரோப்யூரான், குளோரெம்பினிகால், போன்ற மருந்துகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த மருந்துகளை செலுத்துவதனால் கால்நடைகளில் இருந்து தயாரிக்கப்படும் உணவை உட்கொள்வதன் மூலம் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதோடு இந்த மருந்துகள் மனிதனின் நோய் எதிர்ப்பு தன்மையை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் இதுபோன்ற மருந்துகளை கால்நடைகளுக்கு செலுத்த வேண்டாம் என மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதற்காக சுற்றறிக்கை ஒன்றை அனைத்து மாநில மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளது. மேலும் தீங்கு விளைவிக்கும் இந்த மருந்துகளை ஏற்றுமதி,இறக்குமதி மற்றும் விற்பனை செய்யவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.