தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி தேஜா. இவரை ரசிகர்கள் மாஸ் மகாராஜா என்று அழைக்கிறார்கள். இவர் தெலுங்கில் கர்தவ்யம் என்ற படத்தில் மூலம் அறிமுகமான நிலையில் அதன் பின்பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக உயர்ந்தார். இந்நிலையில் ரவிதேஜா நடிப்பில் சமீபத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை ஹரிஷ் ஷங்கர் இயக்கியிருந்த நிலையில் பாக்கியஸ்ரீ ஹீரோயின் ஆக நடித்திருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

இந்த படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியான நிலையில் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் புரியவில்லை. சுமார் 80 கோடி பட்ஜெட்டில் உருவான மிஸ்டர் பட்ஜெட் திரைப்படம் 15 கோடி கூட வசூலிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக ரவி தேஜா தன்னுடைய சம்பளத்திலிருந்து 3 கோடி ரூபாயை தயாரிப்பு நிறுவனத்திற்கு திரும்ப கொடுத்துள்ளார். இதேபோன்று இயக்குனரும் தன்னுடைய சம்பளத்திலிருந்து 2 கோடி ரூபாயை திரும்ப கொடுத்துள்ளார். ஆனால் தயாரிப்பு நிறுவனம் அவர்களிடம் பணம் கேட்கவில்லை. இருந்தாலும் தாமாகவே முன்வந்து நஷ்டத்தை ஈடு செய்வதற்காக பணம் கொடுத்தனர். மேலும் இந்த படம் netflix ஓடிடி தளத்தில் வருகிற 12-ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.