நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யத்தில் நாகை வழித்தடத்தில் சம்பவத்தன்று தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் தோப்பு துறை பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவரது மகள் ஜெயபாரதி நாகைக்கு பயணம் செய்துள்ளார். இந்நிலையில் அவர் அணிந்திருந்த ஒரு பவுன் சங்கிலியை பேருந்தில் தவற விட்டுள்ளார்.

அந்த மாணவி தவறவிட்டு சென்ற தங்க சங்கிலியை பேருந்தில் இருந்த டிரைவர் வடிவேலு, கண்டக்டர் விநாயகம் ஆகியோர் பத்திரமாக எடுத்து வைத்து மீண்டும் அந்த மாணவியிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு மாணவியின் பெற்றோர் சார்பில் சமூக அலுவலர் கோவிந்தராஜு மற்றும் பயணிகள் பேருந்து டிரைவர் மற்றும் கண்டக்டருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.