டெல்லி விமான நிலையத்தில் கடந்த 17 ம் தேதி நடந்த ஒரு சம்பவம் இணைய வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் விமான நிலையத்தின் உணவகத்தில் பெரியவர் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தனர்.

அப்போது விமான நிலையத்தில் இருந்து  பெண் டாக்டர் ஒருவர் ஓடி வந்தார். அவர் அந்த பெரியவருக்கு சிபிஆர் முதலுதவி செய்து அவரது உயிரை காப்பாற்றினார். மேலும் பெரியவர் கண் விழிக்கும் வரை அவர் அருகில் இருந்து அவரிடம் பேசிக்கொண்டே இருந்தார். அதன் பிறகு அந்த பெரியவர் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இணைய வலைதளத்தில் இந்த வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் அந்த வீடியோவை பார்த்த இணையதள வாசிகள் பெண் டாக்டரை பாராட்டி தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.