
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகர் அஜித்தின் சிறு வயது புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அடிக்கடி முக்கிய பிரபலங்களின் சிறு வயது புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரலாகும் நிலையில், தற்போது பல கோடிக்கணக்கான ரசிகர்களால் கொண்டாடப்படும் தல அஜித்தின் சிறு வயது புகைப்படம் வெளியாகியுள்ளது. மேலும் இந்த புகைப்படத்தை தல ரசிகர்கள் சோசியல் மீடியாவில் அதிக அளவில் ஷேர் செய்து வருகிறார்கள்.
