
பெரும்பாலும் மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்வதால் விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமா இருக்கிறது. இதனால் விடுமுறை நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் கூட்ட நெரிசல்களை குறைப்பதற்காக தாம்பரம் – ராமநாதபுரம் இடையே வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் 21, 23, 28, 30 மற்றும் ஜூலை 5, 7, 12, 14, 19, 21, 26, 28 ஆகிய தேதிகளை தாம்பரத்திலிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 7.50 மணிக்கு இராமநாதபுரம் சென்றடைகிறது. மறு மார்க்கமாக மாலை 3 மணிக்கு புறப்பட்டு காலை 3:15 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது.
.