திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் மேடையில் மக்களிடம் உரையாற்றினார். அப்போது, இன்னைக்கு பள்ளிக்கல்வித்துறை தமிழகத்திற்கே பெரும் புகழை தேடித் தந்துள்ளது. இந்த புகழ் இந்திய புகழ் என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் சொல்லப்போனால் இது உலக புகழ். சாரண சாரணியர் இயக்கத்தில் எட்டில் ஒரு பங்கு நம் இந்தியா முழுவதும் 80 லட்சம் மாணவர்கள் இந்த இயக்கத்தில் பயணிக்கிறார்கள். இதில் தமிழகத்தில் மட்டுமே 12 லட்சம் மாணவர்கள் உள்ளனர். எதுவாக இருந்தாலும் நம்முடைய தமிழகத்தின் பங்கு என்பது அதிகமாக தான் இருக்கும் என்பது இதிலிருந்து தெரிகிறது.

சாரண சாரணியர் இயக்கத்தின் பெருந்திரளனி ஒவ்வொரு நாட்டிலும் நான்கு வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. ஆனால் இந்தியாவில் இதுவரை 20 முறைக்கு மேல் நடத்தப்பட்டுள்ளது. 2000 ஆண்டில் தமிழ்நாட்டில் இந்த இயக்கத்தின் பொன்விழா நடந்தபோது தமிழகத்தின் முதல்வராக இருந்த கருணாநிதி அன்று அதனை நடத்திக் காட்டினார். இன்று வைர விழா கொண்டாடும்போது நான் முதல்வராக இருக்கின்றேன். கருணாநிதி தான் இந்த நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி என்று சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில் ஏராளமான பள்ளி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை உருவாக்கியது அவர்தான் என்று பெருமையாக பேசி உள்ளார்