சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஐபிஎல் 3-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. அந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொண்டது. அதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. மும்பை அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் 155  ரன்கள் சேர்த்தது. அதில் அதிகபட்சமாக திலக் 31 ரன்கள் அடித்தார்.

இதனையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. 19.1 ஓவர்களின் 6 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திர 65 ரன்கள் அடித்தார்.

இந்த நிலையில் தோனி மற்றும் ஜடேஜாவை தீபக் சஹார் ஜாலியாக சீண்டிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கடந்த 7 சீசன்களாக தீபக் சஹார் சென்னை அணிக்காக விளையாடினார். இந்த முறை அவர் மும்பை அணியில் விளையாடுகிறார். தோனி பேட்டிங் செய்ய வரும் போது தீபக் கிண்டல் செய்யும் விதமாக பேசி உள்ளார். அதனை கண்டு கொள்ளாமல் தோனி பேட்டிங் செய்துள்ளார்.

பேட்டிங் முடிந்த பிறகு தோனி விளையாட்டு தனமாக பேட்டால் தீபக்கை அடிக்கும் முயற்சி செய்துள்ளார். அதிலிருந்து தீபக் தப்பித்து விடுவார். பின்னர் சிரித்தபடியே தோனி அங்கிருந்து செல்கிறார். ஜடேஜா பேட்டிங் செய்ய வரும்போதும் தீபக் கிண்டலடித்துள்ளார். இதனால் ஜடேஜாவும் தீபக்கை தாக்குவது போல சைகை செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.