
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் நடிப்பது அல்லாமல் படங்களையும் இயக்கி வருகிறார் .இவர் இயக்கிய முதல் படம் பவர் பாண்டி. இந்த படம் சுமாரான வெற்றியை பெற்றது. அடுத்ததாக இவர் இயக்கிய இரண்டாவது திரைப்படம் ராயன். இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் படைத்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. இவருடைய இயக்கத்தில் மூன்றாவது படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இந்த படம் திரையரங்குகளில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
இந்நிலையில் தனுஷ், அஜித் காம்போவில் படம் உருவாக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கான பேச்சுவார்த்தை ஆரம்பத்தில் இருப்பதாகவும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இவர்களுடைய காம்போ குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்தில் டான் பிக்சர்ஸ் உடன் தயாரிக்க இருப்பதாகவும் படம் பிரம்மாண்டமாக உருவாகும் என்றும் கூறப்படுகிறது. ரேஸில் பிசியாக இருக்கும் அஜித் சென்னை திரும்பியதும் இந்த கூட்டணியில் உருவாகவுள்ள புதிய படம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது.