நடிகர் பிரேம்ஜி இந்துவை திருமணம் செய்வதற்காக தன்னுடைய பழைய காதலியை கழட்டி விட்டதாக பத்திரிக்கையாளர் ஒருவர் பேசிய சம்பவம் தற்போ இணைய வாசிகள் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ் சினிமாவில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் பிரபலமானவர் நடிகர் பிரேம்ஜி. இவர் கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி திருத்தணியில் இந்து  என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். எளிமையான முறையில் திருமணம் நடக்கும் என்று வெங்கட் பிரபு அறிக்கை வெளியிட்ட நிலையில் முன்னணி நடிகர்கள் மாத்திரம் கலந்து கொண்டார்கள். அதன் பிறகும் வரவேற்பு நிகழ்ச்சியானது ஆடம்பரமாக நடந்ததாக கூறப்படுகிறது.

இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் நடிகர் பிரேம்ஜியின் பழைய காதல் கதை எப்படி முடிந்தது என்பது குறித்து பத்திரிகையாளர் பரமேஸ்வரன் கூறியுள்ளார். அதில், நடிகை மற்றும் தயாரிப்பாளரான சோனாவை பிரேம்ஜி காதலித்தார். திருமணத்தில்முடிய வேண்டிய காதல் தோல்வியில் முடிந்தது. இதற்கான காரணம் சோனா தான் என்று பிரேம்ஜி கூறினார்.

பிரேம்ஜியோடு சேர்ந்து வாழலாம் என்ற எண்ணத்தில் இருந்த சோனா,  பிரேம்ஜி திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. இதற்கிடையில் இந்து பிரேம்ஜிக்கு அறிமுகமானார். அதன் பிறகு இருவரும் இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர். புதிய காதலால் பழைய காதலியை மறைந்த பிரேம்ஜி சந்தோஷமாக திருமணம் செய்து கொண்டார்.