ZIM VS IND முதல் டி20 போட்டியில் ஜுரலின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு ஜிம்பாப்வே வீரர் லூக் ஜோங்வே  கொண்டாட்டம் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் இது குறித்து தற்போது அவர் விளக்கம் அளித்துள்ளார் . அதாவது போட்டிக்கு முன்பாக என்னுடைய காதலியுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தேன்.

அப்போது விக்கெட் எடுத்ததால் அதனை எப்படி கொண்டாட வேண்டும் என்று உரையாடிக் கொண்டிருந்தோம். விக்கெட் வீழ்த்தும்போது ஷூவை எடுத்து காதில் வைத்து கால் பேசுவது போல செய்யுமாறு என்னுடைய காதலி கூறினார். யாரையும் அவமானப்படுத்தும் நோக்கில் நான் அப்படி செய்யவில்லை என்று கூறியுள்ளார்.