
மத்திய அரசாங்கம் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில் அதற்கு தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவிக்கிறது. அதாவது தேசிய கல்விக் கொள்கையின் மூலம் ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்க பார்க்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்த நிலையில் தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அமித்ஷாவை விமர்சித்து ஒரு எக்ஸ் பதிவை அதில் கூறப்பட்டிருப்பதாவது,
“மோடி அரசின் தேசியக் கல்விக் கொள்கை சமஸ்கிருதத்தை முக்கிய தூணாகக் கொண்ட இந்திய அறிவு முறைக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது” என்று பேசியுள்ளார் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அவர்கள்.
இதைத்தான் நாங்களும் தெரிவித்து வருகிறோம். “வர்ணாசிரமத்தை உயர்த்திப் பிடிக்கும் சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்ட தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம்” என்கிறோம். “இந்தியை முன்னால் அனுப்பி பின்னால் சமஸ்கிருதத்திற்கு மணி கட்டி அனுப்புவதுதான் தேசியக் கல்விக் கொள்கை” என்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.