இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இவர் பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார். குறிப்பாக ஹோட்டல் தொழில். இவர் கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவில் பிரபல ஹோட்டலுடன் பார் ஒன்றினை நடத்தி வருகிறார். அதாவது பெங்களூருவில் நட்சத்திர ஹோட்டல்கள் நள்ளிரவு 1 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி இருக்கும் நிலையில் அவருடைய ஹோட்டல் நள்ளிரவு 1.30 மணி வரை இயங்கியுள்ளது.

இது தொடர்பாக அந்த ஹோட்டல் மேலாளர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விராட் கோலி அங்கு ஒன்8 கம்யூன் என்ற ஹோட்டலை நடத்திவரும் நிலையில் அதன் கிளை மும்பை, புனே, டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.