
செர்பியா நாட்டை சேர்ந்த நம்பியோ நடத்திய ஆய்வில் இந்திய அளவில் பாதுகாப்பான மாநகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது. உலக அளவில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை கொண்ட மாநகரங்களின் பட்டியலில் 78.4 புள்ளிகள் உடன் சென்னை 127 வது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு சென்னை காவல் துறையினரின் அர்ப்பணிப்பு முக்கிய காரணம் என்று காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.