
ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி அடுத்த மாதம் 1ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணி அமெரிக்கா சென்ற நிலையில் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் அவர்களுடன் செல்லவில்லை. இதனால் இந்திய அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகியதாக தகவல்கள் பரவியது.
இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது ஹர்திக் பாண்டியா ட்விட்டரில் புகைப்படம் பகிர்ந்துள்ளார். அதாவது தேசிய கடமைகள் எனும் தலைப்பில் இந்திய அணியுடன் பயிற்சி செய்யும் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். மேலும் இதன் மூலம் ஹர்திக் பாண்டியா டி20 உலக கோப்பையில் விளையாடுவது உறுதியாகியுள்ளது.