கேரளாவில் அடுத்த வருடம் சர்வதேச கால்பந்து போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி அணியான அர்ஜென்டினா அணி கலந்து கொள்ள இருக்கிறது. இதனை கேரள விளையாட்டு துறை மந்திரி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்தப் போட்டி மாநில அரசின் மேற்பார்வையில் நடைபெற இருக்கிறது.

6இந்த போட்டியை நடத்துவதற்கான அனைத்து உயர்தர நிதிகளும் கேரள மாநில வணிகர்களால் வழங்கப்படும் நிலையில் மெஸ்ஸி கலந்துகொள்ளும் ஒரு சர்வதேச கால்பந்து போட்டியை நடத்தும் அளவுக்கு கேரளாவுக்கு திறமை உள்ளது என முதல்வர் பினராயி விஜயன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பினராயி விஜயன் வெளியிட்ட x பதிவில், FIFA உலகக்கோப்பை கால்பந்து சாம்பியன் அர்ஜென்டினா அணி அடுத்த வருடம் கேரளாவிற்கு வரவுள்ளது. இதன் மூலம் கேரளா புதிய வரலாறு படைக்க இருக்கிறது. மாநில அரசின் முயற்சி காரணமாக இந்த கனவு நனவாகியுள்ளது. மேலும் கால்பந்து மீதான கனவை கொண்டாடவும் சாம்பியன்களை வரவேற்கவும் தயாராவோம் என்று பதிவிட்டுள்ளார்.